என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்
    X

    ஈரோட்டில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்

    வக்கீல்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெறக் கோரி வக்கீல்கள் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    வக்கீல்களின் வேலை நிறத்தம் போராட்டத்தால் கோர்ட் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரையில் நடந்த கூட்டத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.

    அதன்படி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் கட்டிடம் முன் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியது. மாலை 5மணி வரை நடக்கும் இந்த உண்ணாவிரதத்துக்கு பார் அசோசியேசன் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோ வரவேற்றார்.

    பொருளாளர் யு.கண்ணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் 250 வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    நாளை (புதன்கிழமை) 2-வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது.

    Next Story
    ×