என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி லட்சுமி வயது (38).  இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது.  3 மகன்கள் உள்ளனர்.  லெட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதால் டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கடுமையாக வயிற்று வலி இருந்ததால் மனமுடைந்த லட்சுமி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்தவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு சிகச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

    இதுகுறித்து லட்சுமியின் அண்ணன் தமிழரசன் தூத்தூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
    Next Story
    ×