என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், நாகை மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் நியமனம்
    X

    திருவாரூர், நாகை மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் நியமனம்

    பாரதிய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலுடன் திருவாரூர், நாகை மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்செல்வம்,கோட்ட பொறுப்பாளர் தங்க வரதராஜன், ஆகியோர் ஒப்புதலுடன் மாநில இளைஞரணி செயலாளர் கே.சரண்ராஜ், திருவாரூர், நாகை மாவட்ட இளைஞரணி புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

    நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக வினோத், மாவட்ட பொதுச் செயலாளர்களாக பாரதிக்கண்ணன், எழிலரசன், மாவட்டத் துணை தலைவர்களாக காசிராமன், ஹீரோ வினோத், சதீஷ், மணிகண்டன், மாவட்ட பொருளாளராக ராம்பிரசாத், மாவட்ட செயலாளர்களாக கணேஷ், ஸ்ரீராம், பார்த்திபன் ஆகியோரும், நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக விஜயகுமார், மாவட்ட பொதுசெயலாளர்களாக பாரத், ரெங்கதுரை, மாவட்டத்துணைத் தலைவர்களாக பிரகாஷ், வெங்கடேசன், ரித்தீஸ், மாவட்ட செயலாளர்களாக முத்து, ஏகாம்பரி, சக்திஒலி, மாவட்ட பொருளாகளராக பார்த்திபன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவராக செல்வம்(எ)தமிழ்செல்வம், மாவட்ட பொது செயலாளர்களாக தம்பா(எ)சதீஷ், மது(எ)மதுசுதன், மாவட்ட பொருளாளராக பூபதி, மாவட்டத் துணை தலைவர்களாக முருகானந்தம், கந்தசாமி, செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்களாக பிரபு, செந்தில், சரவணகுமார், சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×