என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சி அருகே பள்ளி வேன் மீது லாரி மோதியது: குழந்தைகள் உயிர் தப்பினர்
    X

    மொடக்குறிச்சி அருகே பள்ளி வேன் மீது லாரி மோதியது: குழந்தைகள் உயிர் தப்பினர்

    பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதி பள்ளி வேன் ஒன்று குழந்தைகளுடன் எழுமாத்தூரிலிருந்து ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு ரோட்டில் ஒரு லாரியும் சென்று கொண்டிருந்தது.

    எழுமாத்தூர் அடுத்த செல்லாத்தாபாளையம் பிரிவில் வேன் டிரைவர் பள்ளி குழந்தைகளை ஏற்றுவதற்காக வேனை நிறுத்தினார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.

    இதில் லாரியும், வேனும் பலத்த சேதமடைந்தது. இதில் பள்ளி குழந்தைகள் 15பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×