என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் தூக்குபோட்டு பெண் தற்கொலை
    X

    நாகையில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

    குடித்து விட்டு கணவர் தகராறு செய்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைக்குளம் மேல்கரை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி அமுதா (68). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ள கருணாகரன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது . இதனால் மனம் உடைந்த அமுதா தனது வீட்டின் மேல் கூரையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நாகை சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×