என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
    X

    வேதாரண்யம் அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

    வேதாரண்யம் அருகே கடைவீதியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 35), கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர் சின்னு (60). இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவு கருப்பம்புலம் கடைவீதியில் நடந்து சென்றனர்.

    அப்போது தஞ்சையிலிருந்து வந்த கார் இவர்கள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் கவிதா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×