என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனையில் இருந்து ரூ2½ கோடி வெளிநாட்டு பணத்துடன் தப்பியவர் விமான நிலையத்தில் சிக்கினார்
    X

    பாரிமுனையில் இருந்து ரூ2½ கோடி வெளிநாட்டு பணத்துடன் தப்பியவர் விமான நிலையத்தில் சிக்கினார்

    பாரிமுனையில் இருந்து ரூ2½ கோடி வெளிநாட்டு பணத்துடன் தப்பியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கில் வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு பணம் ரூ.2 கோடியே 60 லட்சத்துடன் நவாஸ்செரீப் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமறைவானார்.

    இது தொடர்பாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்நிறுவனத்தில் பணியாற்றும் தினேஷ்குமார், உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ரூ.2½ கோடி பணத்துடன் தலைமறைவான நவாஸ் செரீப்பை போலீசார் தேடி வந்தனர். விமான நிலையத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் நவாஸ்செரீப் வந்து இறங்கினார். அவரை குடியுரிமை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நுங்கம்பாக்கம் போலீசில் நவாஸ்செரீப் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×