என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய வாஸ்து ஆமைகள் பறிமுதல்
    X

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய வாஸ்து ஆமைகள் பறிமுதல்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய வாஸ்து ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹபீப் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கட்டி வைத்திருந்த துணியில் பூச்சி ஊர்வது போன்று இருந்தது.

    சந்தேகம் அடைந்த அதிகாரிகள் துணியை பிரித்து பார்த்த போது சுமார் ஆயிரம் ஆமை குஞ்சுகள் இருந்தன. அளவில் மிகவும் சிறியதாக உள்ள இந்த ஆமைகள் வியாபார நிறுவனங்கள், வீடுகளில் வாஸ்துவுக்காக வளர்க்கப்படுவது ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முகமது ஹபீப்பிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாஸ்து ஆமைகள் வனச்சரக ஆவணகாப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×