என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பஸ்நிலையத்தில் தவிப்பு: காதலனுடன் ஓடிவந்த இளம்பெண் மீட்பு
    X

    ஈரோடு பஸ்நிலையத்தில் தவிப்பு: காதலனுடன் ஓடிவந்த இளம்பெண் மீட்பு

    ஈரோடு பஸ்நிலையத்தில் காதலனுடன் ஓடிவந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.
    ஈரோடு:

    திருப்பூர் அருகே கொடுவாயை சேர்ந்த 16 வயது இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரிடம் காதல் கொண்டார். காதல் ஜோடியினர் திடீரென வீட்டை விட்டு வெளியேறினர்.

    அங்கிருந்து ஒரு பஸ் மூலம் ஈரோடு வந்தனர். ஈரோடு வந்த அந்த காதல் ஜோடி எங்கு போவது என்ன செய்வது? என பஸ் நிலையத்தில் அங்கும் இங்கும் சென்றபடி தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அந்த பெண்ணை ஈரோடு சைல்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். பிறகு அந்த இளம்பெண்ணின் தந்தையை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×