என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற மூதாட்டி
    X

    ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற மூதாட்டி

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் காந்திவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தனலட்சுமி (வயது 11). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறாள்.

    மாணவி தனலட்சுமியை ஒருமூதாட்டி நைசாக பேசி ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்தாள். பிறகு அந்த மாணவியை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்து ரெயிலில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது ரெயில்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசாருக்கு அந்த மூதாட்டியின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. தன்னை நோக்கி போலீசார் வந்ததை கண்ட மூதாட்டி மாணவியை விட்டுவிட்டு விறுவிறுவென வேகமாக நடந்து ஓட்டம் பிடித்தார். பிறகு தனியாக விடப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு விசாரித்து ஈரோடு சைல்டு லைன் நிறுவனத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் உரிய முறையில் விசாரித்து மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×