என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே செயின் பறித்த கொள்ளையனை விரட்டிபிடித்த பொது மக்கள்
    X

    திருப்போரூர் அருகே செயின் பறித்த கொள்ளையனை விரட்டிபிடித்த பொது மக்கள்

    திருப்போரூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவனை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த வெங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62) இவர் நேற்று பகல் 12 மணியளவில் வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல் கேட்டுள்ளனர். பின்னர் திடீரென சின்னம்மாள் கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். சின்னம்மாள் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக 15-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் செயின் பறிப்பு திருடர்களை விரட்டிச்சென்றனர். சுமார் 10 கி.மீ விரட்டிச்சென்ற பொதுமக்கள் கருநிலம் அருகே உள்ள நீலமங்களம் பகுதியில் இருவரையும் மடக்கினர்.

    இதில் ஒருகொள்ளையன் பொது மக்களிடம் சிக்கினான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். அவனுக்கு தர்மஅடி கொடுத்து திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவன் வேங்கடமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவன் விஜய் (வயது 27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    தப்பி ஓடிய விஜய் ஊரப்பாக்கம் பெருமாள் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டவன் என கூறப்படுகிறது. பிடிபட்ட செயின்பறிப்பு திருடனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×