என் மலர்
செய்திகள்

ஆறுகாட்டுத்துறை கப்பற்படை முகாமில் உயர்அதிகாரி ஆய்வு: புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்
ஆறுகாட்டுத்துறை கப்பற்படை முகாமில் உயர்அதிகாரி புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் கப்பற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமின் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடற்படை தென்பிராந்திய அதிகாரி ரியர் அட்மிரல் அலோக்பட்நாகர் 2 இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அவரை ஆறுகாட்டுத்துறை முகாம் அதிகாரி கமாண்டர் இன்சார்ஜ் பரேஷ்கவுலி வரவேற்று முகாம்களை சுற்றி காண்பித்தார். பின்பு அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் முகாமின் பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தார். அவரிடம் மாயமான விமானம் குறித்து கேட்ட போது, விசாகப்பட்டினத்தில் உள்ள அதிகாரிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
Next Story






