என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர் யார்?: போலீசார் விசாரணை
    X

    சென்னிமலை அருகே காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர் யார்?: போலீசார் விசாரணை

    சென்னிமலை அருகே காட்டுப்பகுதியில் முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சென்னிமலை அருகே உள்ள காப்புக்காடு கணுவாய் மலைக்கோவில் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஒரு முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த வனத்துறையினர் இது பற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய முதியவரின் பிணத்தை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கினர்.

    இதன்பிறகு பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்கொலை செய்து கொண்டவருக்கு சுமார் 70 வயதிருக்கும். அர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×