என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் வேன் மோதி பலி
    X

    ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் வேன் மோதி பலி

    ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள மூங்கில் பட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 22) பெயிண்டர்.

    இவர் மோட்டார் சைக்கிளில் வேலை வி‌ஷயமாக ஆப்பக்கூடல் அருகே உள்ள கருவாடி புதூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வெங்காயம் ஏற்றி கொண்ட வேனும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட கோபிநாத் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்

    விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு சுபாஷினி என்ற மனைவியும் இளவரசன் (3) என்ற மகனும், கவுசல்யா (1)என்ற மகளும் உள்ளனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×