என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி
ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 01.08.2016 முதல் 31.08.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெறுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது–
ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 01.08.2016 முதல் 31.08.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம் – தா.பழூர் – ஜெயங்கொண்டம் –மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற விருக்கிறது.
மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story






