என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் குறித்து அரியலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    உள்ளாட்சி தேர்தல் குறித்து அரியலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    அரியலூரில் அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கமல கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளவழகன், அண்ணாதுரை, துரை மணிவேல், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சைமுத்து, மாவட்ட அணி செயலாளர் சங்கர் (மாணவர் அணி), ஜீவா (மகளிரணி), சிவசுப்பிர மணியன் (இலக்கிய அணி), சிவசங்கர்(இளைஞரணி) அக்பர் ஷெரீப் (சிறுபான்மை பிரிவு), வெங்கடாஜலதிபதி (வக்கீல் பிரிவு) மருதை (தொழிற்சங்கம் ), ஜெய ராமன் (மருத்துவ அணி)யூனியன் சேர்மன்கள் கவிதா சேப் பெருமாள், ஜெயசுதா (தா. பழுர்), சீனிவாசன் ( திருமானூர்), ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, குமரவேல், வரதராஜன், சிங்காரம், கல்யாண சுந்தரம், நகர செயலாளர்கள் கண்ணன், செல்வராசு, பேரூராட்சி செயலாளர்கள் பெருமாள், லாரன்ஸ், கல்லங்குறிச்சி பாஸ்கர், வக்கீல் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கமலகண்ணன், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சந்திரகாசி எம்.பி. ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    முடிவில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சேகர் நன்றி கூறினார்.
    Next Story
    ×