என் மலர்
செய்திகள்

அவல்பூந்துறையில் ரூ.47 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 47 லட்சத்து 63 ஆயிரத்துக்கு கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2ஆயிரத்து 17 மூட்டைகளில் 94 ஆயிரத்து 735 கிலோ எடையுள்ள கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.53.25–க்கும், குறைந்தபட்ச விலை ரூ.50.05–க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.52.05–க்கும் குறைந்த பட்ச விலை ரூ.39.60–க்கும் என மொத்தம் ரூ.45 லட்சத்து 84 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதே போல் 13 ஆறாயிரத்து 642 கிலோ எடையுள்ள 33 ஆயிரத்து 811 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிக விலை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்து 9, குறைந்த விலை டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 519 என ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
Next Story






