என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து திருமயத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து அ.தி.மு.க. கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து அ.தி.மு.க. கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் தொகுதி முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து யாருடைய சிபாரிசும் இல்லாமல் கட்சியில் வெற்றி வாய்ப்பு உள்ள நபர்களுக்கு சீட் வழங்கப்படும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத்தலைவர் முதல் கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
அதற்கு கட்சி நிர்வாகிகள் எப்படி செயல்படவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
Next Story






