என் மலர்
செய்திகள்

திருமயம் அருகே பைக் மோதி 2 பேர் காயம்
திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே இருசக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே இருசக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காரைக்குடியை சேர்ந்த ஜபருகான்,ஷாஜகான் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த ஜபருகான்,ஷாஜகான் ஆகிய 2 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story