என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
    X

    ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

    ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேரை கைது மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்டசோழபுரத்தை சேர்ந்த பண்டரிநாதன் மனைவி தனலெட்சுமி (வயது 65). இவருக்கும் அதே ஊரைசேர்ந்த வெங்கடாசலம் மகன் சீதாபதி(34) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது.

    கடந்த 15-ம் தேதியன்று ஏற்பட்ட தகராறில் சீதாபதி மற்றும் சிலர் சேர்ந்து வீட்டிலிருந்த தனலட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த தனலெட்சுமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிந்து சீதாபதி, குருவாலப்பர்கோவில் பாரதி (35), தொட்டிகுளம் மோகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
    Next Story
    ×