என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் திருடிய 4 வாலிபர்கள் கைது
    X

    மானாமதுரை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் திருடிய 4 வாலிபர்கள் கைது

    மானாமதுரை சிப்காட் தொழிற்சாலையில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மானாமதுரை:

    மானாமதுரை சிப்காட்டில் பிரபல டி.வி. கம்பெனி தொழிற்சாலை உள்ளது. இங்கு வெளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களின் செல் போன்கள் திருடு போயின. இவ்வாறு 11 செல் போன்கள் திருடு போனது.

    இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் தியாகராஜன் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தொழிற்சாலையில் பணிபுரிந்த ரபீக், மணி கண்டன், நெல்லை சுபாஷ், ராஜகம்பீரம் பழனி ஆகிய 4 பேர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×