என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழுதிவாக்கத்தில் பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி
    X

    புழுதிவாக்கத்தில் பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி

    புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
    ஆலந்தூர்:

    கீழ்ப்பாக்கம், ஒசான் குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஐசக் செல்லத்துரை (வயது 28) ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை ஐசக் செல்லத்துரை மடிப்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் மனைவியை இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார்.

    புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். சாலையில் சென்ற போது பின்னால் வந்த தனியார் ஐ.டி. நிறுவனத்துக்கு ஆட்கள் ஏற்றிச் சென்ற பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி ஐசக் செல்லத்துரை பலியானார்.
    Next Story
    ×