என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலையில் நாளை மின் தடை
    X

    சென்னிமலையில் நாளை மின் தடை

    சென்னிமலையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் நாளை 21-ந் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

    சென்னிமலை நகர் பகுதி முழுவதும், சின்னபிடாரியூர், நாமக்கல்பாளையம், மேலப் பாளையம் இராமலிங்கபுரம், புதுப்பாளையம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாலத்தொழுவு, கொடுமணல், வெப்பிலி, அசோகபுரம், கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத் தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை பெருந்துறை செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    Next Story
    ×