என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் வக்கீலுக்கு கத்திக்குத்து: தே.மு.தி.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது
காஞ்சீபுரத்தில் வக்கீல் கத்திக்குத்து வழக்கில் தே.மு.தி.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசர் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். வக்கீல். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாசுதேவனை மர்ம கும்பல் வெட்டியது. இதில் கையில் பலத்த காயம் அடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காஞ்சீபுரம் பாலிமேடு பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் சரவணன், அவரது சகோதரர் செந்தில்குமார், ரகுவரதன், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. கைதான சரவணன் என்பவர் தே.மு.தி.க. தலைமைக் கழக பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story