என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
    X

    கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

    கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    பவானி பழனி புரம் முதல் வீதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 27). நேற்று இவர் ஈரோடு வந்தார். பிறகு வேலையை முடித்து விட்டு பவானி செல்வதற்காக ஈரோடு பஸ்நிலையத்துக்கு செல்வதற்காக மேட்டூர் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி யுவராஜிடம் இருந்த ரூ. 500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டார்

    இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ் திருடன் திருடன் பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியின் பின்புறத்தில். யுவராஜை தாக்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அவர்களையும் அந்த வாலிபர் கத்தியை காட்டி “என்னை பிடிக்க முயன்றால்கொன்று விடுவேன்” என்று மிரட்டினாராம். இருப்பினும் பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவனது பெயர் ஜஸ்டின் சுந்தர் சிங் (வயது 32) நம்பியூர் அருகே உள்ளவெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் என்பதுதெரிய வந்தது

    இதை யொட்டி ஈரோடு டவுன் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 500 மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×