என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
ஈரோடு அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பவானி அருகே உள்ள தாழைப்பையனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 29). இவரது மனைவி ரேவதி (23). இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது,
அப்போது ரேவதி தொடர்ந்து தகராறு செய்தால் உங்களுடன் சேர்ந்து பிழைக்க மாட்டேன் என்று கூறினாராம்.
இதன் பிறகு ரேவதி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






