என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி வாலிபர் தீக்குளித்து பலி
    X

    டி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி வாலிபர் தீக்குளித்து பலி

    டி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி வாலிபர் தீக்குளித்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    பங்களாபுதூர் அருகே உள்ள காளியூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 30).

    தொழிலாளியான இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இதை தொடர்ந்து சம்பவத்தன்று தர்மன் தனது வீட்டின் முன்பு தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துகொண்டார்.

    இதனால் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. வேதனை பொறுக்க முடியாமல் தர்மன் அலறினார். இதை பார்த்த அவரது மனைவி செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

    இதன் பிறகு தர்மன் மீது எரிந்த தீயை அணைத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×