என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீர் பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சிலிருந்து வெளியே விழுந்த பெண்
    X

    திடீர் பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சிலிருந்து வெளியே விழுந்த பெண்

    திடீரென பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சிலிருந்து வெளியே விழுந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள துடுப்பதிகள்ளி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 60). விஜயலட்சுமி பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் டிரைவர் திடீரென ‘பிரேக்’ போட்டதாக தெரிகிறது. இதில் விஜயலட்சுமி பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இடுப்பு எலும்பு முறிந்தது. வலியால் துடித்த அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×