என் மலர்
செய்திகள்

முட்டுக்காடு படகுதுறையை ஆய்வு செய்த உ.பி.மாநில தலைமை செயலக அதிகாரி மனைவி திடீர் சாவு
முட்டுக்காடு படகுதுறையை ஆய்வு செய்த உ.பி.மாநில தலைமை செயலக அதிகாரி மனைவி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்போரூர்:
டெல்லியில் உள்ள ஆசிய வங்கியில் அதிகாரியாக இருந்தவர் ஷர்மிளா சிங் (வயது 45). இவரது கணவர் உத்திரபிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளார்.
முட்டுக்காடு படகுத்துறை, முதலியார்குப்பம் படகுத்துறை ஆகியவற்றின் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஆசியன் வங்கியின் சார்பில் நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக இப்பகுதிகளை பார்வையிட ஷர்மிளாசிங் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நேற்று சென்னையிலிருந்து முட்டுக்காடு படகுத்துறைக்கு வந்தனர்.
அவர்கள் முட்டுக்காடு படகுத்துறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது ஷர்மிளாசிங்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷர்மிளாசிங் இறந்து போனார்.

Next Story