என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணியில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்: போலீசார் விசாரணை
வேளாங்கண்ணி மெயின் ஆர்ச் அருகில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி மெயின் ஆர்ச் அருகில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். சுமார் 72 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அவரது அருகில் வயலுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து காலி டப்பா ஒன்று கிடந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






