என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மூலம் மீட்பு
புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தங்களது படகில் சென்று மீட்டு வந்தனர்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த குரூஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன் பிடித்து விட்டு, இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். அய்யம்பட்டினம் கடற்கரையில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது , திடீரென காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கியது.
இதனால் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் 4 பேரும் உடனடியாக செல்போன் மூலம் படகு உரிமையாளர் குரூசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தங்களது படகில், கடலுக்குள் சென்றனர். பின்னர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் தங்களது படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த 9-ந்தேதி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. அவர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று பைபர் படகு மூழ்கியதில் 4 மீனவர்கள் கடலில் தத்தளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story