என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
வேதாரண்யம் அருகே 2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெண் தற்கொலை முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு, மணக்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (வயது 35) விவசாயி. இவரது மனைவி கோமகள் (30). இவர்களுக்கு கருனி என்ற 7 வயது மகளும், ஹரிஹரன் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுவந்தது. இதில் மனமுடைந்த கோமகள் தனது 2 குழந்தைகளுக்கும் அதிக அளவில் தூக்க மாத்திரையை உணவில் கலந்து கொடுத்து விட்டு அவரும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story