என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் உறவினர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய வாலிபர்
ஈரோடு:
ஈரோடு,காசிபாளையம் கல்யாணசுந்தரனார் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது24). கூலி தொழிலாளி.
சந்தோஷ்குமார் நல்லியம்பாளையம், வடுகன் தோட்டத்தில் உள்ள சின்ன மாமியார் நாகஜோதி வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்றும் சந்தோஷ்குமார் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நாகஜோதி வீட்டில் உள்ள கொக்கியில் தனது 7 பவுன் தாலிசெயினை தொங்கவிட்டு இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது அந்த தாலிசெயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செயய்தார். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்த போது அவர் தாலிசெயின் திருடியதை ஒப்பு கொண்டார்.
அவனிடம் இருந்து திருடபட்ட நகையை போலீசார் மீட்டனர். உறவினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய வாலிபரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






