என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு - ரூ. 10 லட்சம் சேதம்
வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பேரூராட்சி அருகில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் மேலாளராக செந்தில்குமாரும், விற்பனையாளர்களாக மதியழகன், மாரிமுத்து, ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கடையின் ஷட்டரை உடைத்தனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியது.
இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கடையில் இருந்த மது பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வேதாரண்யம் டி.எஸ்.பி. பொன். கார்த்திக் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். தீ வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கடந்த 1-ந் தேதி வெள்ளப்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தது.
தொடரும் தீ வைப்பு சம்பவத்தால டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story