என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ஒன்றியம் சிட்டங்காடு ஊராட்சி கரிசக்காடு பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொது மக்கள் குடிநீர் வழங்காத சிட்டங்காடு ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பரவாக்கோட்டை கடைவீதியில் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டனர்.

Next Story