என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் போராட்டம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் போராட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட நகலை எரித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    வழக்கறிஞர் சட்டத்தில் உள்ள புதிய சட்ட விதிகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வக்கீல்கள் கடந்த மாதம் 6–ந்தேதி முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சட்ட நேற்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை,கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய 5 இடங்களில் நகல் எரிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.

    பவானியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அருள் தாஸ் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதன்பிறகு சட்டநகலை வக்கீல்கள் எரித்தனர்.

    கொடுமுடியில் உள்ள கோர்ட்டு முன்பு பார் கவுன்சில் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மூத்த வக்கீல் குழந்தை வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்டவிதிகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×