என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பாச்சேத்தி அருகே விவசாயி வெட்டி படுகொலை: மனைவி வெறிச்செயல்
    X

    திருப்பாச்சேத்தி அருகே விவசாயி வெட்டி படுகொலை: மனைவி வெறிச்செயல்

    திருப்பாச்சேத்தி அருகே குடும்ப தகராறில் விவசாயி மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள டி.வேலாங்குளத்தைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது40), விவசாயி. இவரது மனைவி ஜெயபாண்டி (38). இவர்களது மகள் பரமேசுவரி (21).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முனீசுவரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரமேசுவரி தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    அவரை கணவர் வீட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ராஜ்குமாருக்கும், ஜெயபாண்டிக்கும் நேற்று இரவில் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் முடிவு ஜெயபாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இன்று அதிகாலை ராஜ்குமார் வீட்டுவாசலில் தலை வைத்து படுத்திருந்தார். அவரை பார்த்ததும் ஜெயபாண்டிக்கு கோபம் ஏற்பட, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜ்குமாரின் பின்தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப தகராறில் மனைவியே கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×