என் மலர்
செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே பட்டப்பகலில் வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
ஆப்பக்கூடல் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி நஞ்சுண்ட புரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35) விவசாய கூலி தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் ஒரு தோட்டத்து வேலைக்கு சென்று விட்டனர். மகள் பள்ளிக்கு சென்று விட்டார்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு மகள் வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உடனே அவள் தன் பெற்றோரிடம் விஷயத்தை சொன்னாள். பெற்றோர் ஓடிவந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 1½ பவுன் நகையை காணவில்லை.
மர்ம ஆசாமிகள் யாரோ பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






