என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் வாலிபரிடம் ரூ.30 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் வாலிபரிடம் ரூ.30 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

    ஹவாலா பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்தில் வாலிபரிடம் ரூ.30 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லும் பயணிகள் ஹவாலா பணம் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த பயணிகளின் உடைமைகனை சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்தவரின் சூட்கேசை பார்த்த போது அதில் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், யூரோ பணம் கட்டு கட்டாக இருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து முகமது ராசிக்கை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×