என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் டிரைவர் கொலையில் ஒருவர் போலீசில் சரண்
    X

    காஞ்சிபுரம் டிரைவர் கொலையில் ஒருவர் போலீசில் சரண்

    டிரைவர் கொலையில் ஒருவர் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) டிரைவர் இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் 17 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    போலீசார் அவரை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி மீனாட்சி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    வேலூர் மாவட்டம் ரத்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், வசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, இவர்கள் இருவர் மீதும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×