என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே ஸ்டவ் வெடித்து மாணவி பலி
சீர்காழி அருகே 7-ம் வகுப்பு மாணவி ஸ்டவ் வெடித்து பலியானார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அருகே சேர்ந்தவர் பாலு. இவரது மகள் பிரியா (12). மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த பிரியா சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






