என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே இளம்பெண் கடத்தல்
வேதாரண்யம் அருகே மாமா வீட்டில் தங்கி இருந்த இளம்பெண்ணை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள வாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மோக பிரியா (17). இவர் தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று மாயமாகி விட்டார்.
அவரை கரையங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் மூனிஸ்வரன் கடத்தி சென்று விட்டாக மோகபிரியா மாமா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






