என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே கோவில் விழாவில் தபசு மரம் ஏறுவதில் கோஷ்டி மோதல்
திருப்போரூர் அருகே கோவில் விழாவில் தபசு மரம் ஏறுவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தபசு மரம் ஏற வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






