என் மலர்
செய்திகள்

நாகப்பட்டினம் அருகே மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை
நாகப்பட்டினம் அருகே மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே உள்ள திட்டச்சேரி திருக்கண்ணபுரம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. கணவன்– மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் விஷம் குடித்து விட்டார். அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






