என் மலர்
செய்திகள்

கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி மாயம்
கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் தும்பிராஜா இவரது தாயார் பெயர் குப்பாயம்மாள் (வயது 85). சம்பவத்தன்று குப்பாயம்மாள் பக்கத்தில் உள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்க சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை வழிதெரியாமல் எங்கேயாவது சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மகன் தும்பிராஜா. ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில் கடைக்கு சென்ற என் தாயார் வழி தவறி மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story






