என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் யார்?: அர்ஜித்படேல், அருந்ததி பெயர்கள் அடிபடுகிறது
By
மாலை மலர்19 Jun 2016 7:41 AM GMT (Updated: 19 Jun 2016 7:41 AM GMT)

ரகுராம்ராஜனுக்கு பதில் புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு அர்ஜித்படேல், அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.
சென்னை:
ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது ரகுராம் ராஜன் இருந்து வருகிறார். தமிழரான இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரது தந்தை கோவிந்தராஜன் மத்திய பிரதேச மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியதால் அவரது குடும்பம் போபாலில் வசித்தது.
அமெரிக்காவில் மேல் படிப்பை முடித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசிரியராக பணியாற்றிய அவரை 2008-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது கவுரவ பொருளாதார ஆலோசகராக நியமித்தார். நிதித்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்த காலத்தில் இவர் ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை ஏற்றார். அப்போது அதிக பணவீக்கம், ரூபாய் மதிப்பில் ஏற்ற-இறக்கம் என பொருளாதார நிலைமை சுமூகமாக இல்லை. ரகுராம்ராஜனின் சீர்திருத்த பணியால் பொருளாதாரம் சீரான நிலையை அடைந்தது.
ரகுராம்ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் பணி நீடிப்பு வழங்க கூடாது என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் தனக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி நீடிப்பு வேண்டாம் என்று ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் சக பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு திரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது பணிகாலத்தில் பல சவால்களை சந்தித்து இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக மாற்றியதாகவும் எனினும் பண வீக்கம், வாராக்கடன் விவகாரத்துக்கு முடிவு கட்டுவது ஆகிய இரு பணிகள் மட்டும் நிறைவடையவில்லை. எனக்கு பிறகு இந்தப் பதவிக்கு வருபவர் திறம்பட கையாள்வார் என நம்புவதாக கூறியுள்ளார்.
ரகுராம்ராஜனுக்குப் பின் புதிய கவர்னர் பதவிக்கு அர்ஜித் பட்டேல், அருந்ததி பட்டாச்சார்யா ஆகிய 2 பேர் பெயர்கள் அடிபடுகிறது. அர்ஜித் பட்டேலுக்கு 52 வயது ஆகிறது.
தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கும் அவர் 2013-ம் ஆண்டு முதல் மத்திய வங்கிகளின் நிதிக்கொள்கைகளை கண்காணித்து வருகிறார். ரகுராம்ராஜனுடன் இணைந்து பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தார்.
மற்றொருவரான அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வயது 60 ஆகிறது. ஸ்டேட் பேங்க் தலைவராக இருக்கிறார். இவரது பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது. சிறந்த நிர்வாக திறமையால் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சாதனை படைத்தார். ‘போர்பஸ்’ பத்திரிகையின் 100 சாதனை பெண்கள் பட்டியலில் அருந்ததி பட்டாச்சார்யாவும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரில் ஒருவர் புதிய ரிசர்வ் வங்கி கவர்னராகும் வாய்ப்பு உள்ளது.

Next Story
×