என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
படிப்படியாக குறைந்து வரும் மதுக்கடைகளின் நேரம்: பார் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு
By
மாலை மலர்19 Jun 2016 6:38 AM GMT (Updated: 19 Jun 2016 6:38 AM GMT)

படிப்படியாக குறைந்து வரும் மதுக்கடைகளின் நேரம் குறைப்பால் பார் உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் காலை 8 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்றும், பின்னர் அதன் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, இப்போது மதியம் 12 மணிக்கு திறக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் பார் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் தொடர்பாக பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-
ஆரம்பத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு விடும். இரவு 12 மணி வரை வியாபாரம் நடக்கும் பின்னர் அதன் நேரம் குறைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு டாஸ்மாக் கடைகளின் திறக்கும் நேரமும் மூடப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. காலை 10 மணியில் கடையை திறந்து இரவு 10 மணிக்கு கடையை மூட முடிவு செய்யப்பட்டது.
இதனால் 16 மணி நேரம் திறந்திருந்த டாஸ்மாக் கடைகள் நேரம் 12 ஆக குறைந்தது.
தற்போது மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வைப்பது என அரசு முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற நேரம் குறைப்பால் பார் உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடைகளில் நடைபெறும் மது விற்பனைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நாங்கள் பணம் கட்ட வேண்டும். விற்பனையில் 2½ சதவீதமாக இருந்தது. இதனை வளர்ச்சி விகிதம் என்கிற அடிப்படை யில் உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்.
தற்போது மது விற்பனையில் 10 சதவீதம் அளவுக்கு பணம் கட்ட வேண்டும் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு தேவையான இடத்தையும் பார் உரிமையாளர்களே பார்த்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் பார் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மதுபான பார்களை யாரும் டெண்டர் எடுக்காத நிலையும் உள்ளது. டாஸ்மாக்கில் மது வாங்கும் எல்லோருமே பாரில் வந்து மது அருந்துவதில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மது விற்பனைக்கு ஏற்ப பார் உரிமையாளர்கள் கட்ட வேண்டிய குறிப்பிட்ட சதவீத தொகையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×