என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்டிகடையில் வியாபாரம் செய்த பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு
    X

    பெட்டிகடையில் வியாபாரம் செய்த பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு

    பெட்டிகடையில் வியாபாரம் செய்த பெண்ணின் வாயை பொத்தி நகை பறித்து சென்ற 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவ குமார். இவர் பெருந்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாமரை செல்வி. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று காலை தாமரைசெல்வி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் தாமரை செல்வியிடம் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு நோட்டமிட்டனர்

    இதன் பிறகு அவர்கள் மீண்டும் மாலையில் வந்து குளிர்பானம் கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த தாமரை செல்வி ஏன் இங்கேயே சுற்றி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.

    உடனே அந்த மர்ம ஆசாமிகள் தாமரைசெல்வி வாயில் துணியை வைத்து அழுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் தாமரைசெல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    Next Story
    ×