என் மலர்
செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு:
அக்னி வெயில் கடந்த 4–ந் தேதியுடன் முடிவடைந்தது.இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அதிகமான வெயில் இருந்தாலும் அவ்வப்போது பெய்த மழை காரணமாக வெப்பம் ஓரளவு தணிந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் திடீர் என்று மழை பெய்தது. பிறகு சிறிது நேரம் விட்டிருந்த மழை மாலையில் மீண்டும் பெய்ய தொடங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்றது.
அதேபோல டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானி சாகர் , தாளவாடி, சென்னிமலை, அந்தியூர், ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை பரவலாக மழைபெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு–
ஈரோடு –7
பவானிசாகர் –8.6
கவுந்தப்பாடி –3






