என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    மொடக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    மொடக்குறிச்சியில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
    ஈரோடு:

    கரூர் சின்னாண்டம் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் மொபட்டில் மொடக்குறிச்சி அருகே உள்ள எல்லக்கடை அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக முத்ததூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இந்த மோட்டார் சைக்கிளும், செல்வராஜ் வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×